அனிருத்தின் தெலுங்கு பட இசை வெளியீட்டு விழா-கோபத்தில் ரசிகர்கள்

தெலுங்கில் அனிருத் இசையமைக்கும் அஞ்ஞாதவாசி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. இப்படத்தின் ஹீரோ பவன் கல்யாண் ஆவார். இசை வெளியீட்டு விழா என்பதால் அனிருத்தின் பெர்ஃபார்மன்ஸ் எப்படியும் இருக்கும் என்று அவரது ரசிகர்கள் ஆர்வத்தோடு இருந்தனர். ஆனால் கூட்ட நெரிசலை தவிர்க்க படக்குழு விழாவில் கலந்துகொள்ள மிகச் சிலருக்கு தான் அனுமதி அளித்துள்ளார்களாம். பலருக்கு கலந்துகொள்ள அனுமதி கிடைக்கவில்லையாம். இதனால் ரசிகர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். ரசிகர்களை சமாளிக்க படக்குழு யுடுயூப், ஃபேஸ்புக் என அனைத்திலும் விழாவை இருந்த இடத்திலேயே காணும்படி நேரலை செய்கிறார்களாம்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment