அதிரடியாக ஆரம்பித்து சொம்பயாக முடித்த மும்பை அணி சாதிக்குமா ராஜஸ்தான்..!

மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 47-வது மற்றும் இன்றைய 2-வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகானே பந்து வீச்சு தேர்வு செய்தார்.Image result for mumbai indian 2018

அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் ஓவருக்கு சராசரியாக 10 ரன்கள் வந்து கொண்டிருந்தது. பவர் பிளேயான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் அடித்தது. அணியின் ஸ்கோர் 10.4 ஓவரில் 87 ரன்னாக இருக்கும்போது சூர்யகுமார் யாதவ் 31 பந்தில் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ரோகித் சர்மா தான் சந்தித்த முதல் பந்திலேயே வெளியேறினார்.Image result for mumbai indian 2018

மறுமுனையில் விளையாடிய எவின் லெவிஸ் 12-வது ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கி 37 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 42 பந்தில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் இஷான் கிஷான் 12 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.Image result for mumbai indian 2018

இதனால் ரன் குவிக்கும் பொறுப்பு ஹர்திக் பாண்டியா தலையில் விழுந்தது. 5-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா உடன் குருணால் பாண்டியா ஜோடி சேர்ந்தார். குருணால் பாண்டியா 3 ரன் எடுத்த நிலையில் நடையை கட்டினார். மும்பை இந்தியன்ஸ் 18 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்திருந்ததுRelated image

19-வது ஓவரை உனத்கட் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் இமாலய சிக்ஸ் ஒன்றை விளாசினார் ஹர்திக் பாண்டியா. அதோடு அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். 3-வது பந்தை சர்வசாதரணமாக ஆஃப் சைடு சிக்ஸ்க்கு தூக்கினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 19 ரன்கள் கிடைத்ததுImage result for mumbai indian 2018


கடைசி ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பென் கட்டிங் சிக்ஸ் விளாசினார். 3-வது பந்தை ஹர்திக் பாண்டியா பவுண்டரிக்கு விரட்டினார். ஐந்தாவது பந்தை தூக்கி அடித்தார். அதை சஞ்சு சாம்சன் பறந்து சென்று கேட்ச் பிடித்தார். ஹர்திக் பாண்டியா 21 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 36 ரன்கள் சேர்த்தார். கடைசி பந்தில் இரண்டு ரன்கள் சேர்க்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது.

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 169 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்….

author avatar
Dinasuvadu desk

Leave a Comment