” அதிமுகவின் பொது செயலாளர் பாஜக-தான் ” பரபரப்பு பேட்டி..!!

காவிரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரானது, டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதி வரை செல்ல நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து அமமுக சார்பில் திருவாரூர் மாவட்ட போராட்டத்தில் பேசிய TTV தினகரன்..,

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் பகுதியில் இன்று காவிரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரானது, டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதி வரை செல்ல நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் பங்கேற்று பேசிய டிடிவி தினகரன் ,

தமிழக அரசின் மீது அடுக்கடுக்கன விமர்சனத்தை முன் வைத்தார்.தொடர்ந்து பேசிய அவர் எடப்பாடி பழனிசாமியையும் , ஓ.பன்னீர் செல்வத்தையும் கடுமையாக குற்றம் சாட்டினார்.அப்போது TTV தினகரன் நான் நினைத்து இருந்தால் 2001ம் ஆண்டே தமிழகத்தின் ” முதலமைச்சராக ஆகி இருப்பேன் ”  என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளது இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து பேசிய ,

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சி முக்கொம்பு மேலணை உடைப்பு ஏற்பட அங்கு நடந்த மணல் கொள்ளையே காரணம் என குற்றம்சாட்டினார்.விவசாயிகள் வீதியில் வந்து போராடியதால் தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதாகவும், அதற்கு அதிமுக அரசு சாதித்து விட்டதாக சொந்தம் கொண்டாட முடியாது எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் ,

எட்டு வழிச்சாலை அமைத்து தான்  தமிழகத்தை உயர்த்தபோவதாக கூறும் எடப்பாடி பழனிசாமியால் காவிரி ஆற்றில் வந்த நீரைக்கூட தேக்கி வைக்க முடியாமல் உள்ள சூழல் உருவாக்கி உள்ளதாக குறிப்பிட்டார். அடுத்து அவர்  ஜெயலலிதா இருக்கும்போதே சதி செய்ததாக தன்மீது குற்றம்சாட்டப்பட்டு வருவதாகவும், தான் ஆசைப்பட்டிருந்தால் 2001ம் ஆண்டே முதல்வராகி இருக்க முடியும் எனவும் தெரிவித்தார். துரோகத்திற்கு என சின்னம் வரைந்தால், அதற்கு அருகே பன்னீர்செல்வத்தை தான் வைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்ட TTV  தினகரன்  அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் பாஜக தான் உள்ளதாகவும் தினகரன் குற்றம்சாட்டினார்…

அமக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் இந்த பேச்சு அரசியலில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.

 

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment