அடிபட்டு ரத்தம் வந்தால் முதலில் இதை செய்யுங்கள்..,

விளையாடும்போது,வாகனத்தில் செல்லும் போதும்,நடந்து செல்லும் போதோ கிழே விழுந்து அடிபட்டு காயமோ அல்லது ரத்தம் வர வாய்ப்புள்ளது.அவ்வாறு இரத்தம் வரும் போது அதனை நிறுத்த நாம் முதலில் முதலுதவி அளிக்க வேண்டும்.

சிறிய காயம், கத்தி அல்லது பிளேடால் ஏற்பட்ட வெட்டுக் காயம், கீழே விழுந்து அடிபட்டது என ரத்தக் கசிவு எப்படி ஏற்பட்டாலும், எங்கிருந்து ரத்தம் வருகிறது என்பதை முதலில் கண்டறிந்து, ரத்தம் வருவதை நிறுத்த வேண்டும். வாய், மூக்கு, கை, கால், நெற்றி என எங்கிருந்து ரத்தம் வந்தாலும் சுத்தமான துணியைவைத்து அழுத்தி, ரத்தத்தைக் முதலில் கட்டுப்படுத்த வேண்டும்.

சில சமயம் மூக்கில் அடிபட்டு  ரத்தம் மூக்கிலிருந்து வந்தால், அவரை முன்னோக்கிக் குனியச்செய்து, மூக்கின் மென்மையான முன்பகுதியை, விரல்களால் பிடித்துக் கொண்டு, வாயால் மூச்சுவிடச் செய்ய சொல்ல வேண்டும். மூக்கிலிருந்து வரும் ரத்தத்தை அவர் வாய்க்குள் விழுங்கிவிட கூடாது. அதனால்தான் முன்னால் குனியச் சொல்கிறோம். தலையைப் பின்பக்கமாக சாய்த்துவிடக் கூடாது. அப்படி சாய்த்தால், ரத்தம் வாய்க்குள் போய், நுரையீரலுக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே நிமிரவே கூடாது. மூக்கு சிந்தச் செய்யவும் கூடாது.

காதிலிருந்து ரத்தம் கசிந்தால், சுத்தமான துணியைவைத்து ரத்தத்தை நிறுத்த வேண்டும். காதுக்குள் தேவை இல்லாமல்  எதையும் போட்டுக் குடையக் கூடாது. அவ்வாறு செய்தால் காதில் தேவை இல்லாத பிரச்சனைகள் ஏற்படும்.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment