அஜித் படத்தில் நீடிக்கும் குழப்பங்கள் : பிப்ரவரி 22ஆம் தேதி படபிடிப்பு ஆரம்பம்

தல அஜித்தின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இபாடத்தில் அஜித் இளமையான தோற்றத்தில் நடிக்கிறார்.
இதனை தவிர மற்ற அனைத்து விவரங்களும் குழப்பமாகவே நீடிக்கிறது. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என அறிவித்தார்கள் பின்னர் அவரும் விலகினார். படத்தை தீபாவளிக்கு வெளியாகும் என அறிவித்தார்கள். தற்போது வரை படபிடிப்பு தொடங்கவில்லை. மேலும், விஜய் சூர்யா படங்கள் தீபாவளி ரேஸில் குதித்துள்ளன.
தற்போது வந்த தகவலின்படி திரைக்கதை இறுதி செய்யும் பணி நடந்து வருவதாகவும், பிப்ரவரி 22ஆம் தேதியன்று ஒரே கட்டமாக படபிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. திரைகதை இறுதி செய்யும் பணி, சக நடிகர்களை தேடும் பணி இசையமைப்பாளரை உறுதி செய்யும் பணி என பல வேலைகள் கிடப்பில் உள்ளன. இத்தனையும் தாண்டி தீபாவளிக்கு படம் வெளிவந்தால் அது தல ரசிகர்களுக்கு பெரிய விருந்துதான்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment