அஜித் படத்திலிருந்து விலகினாரா யுவன் ?! : அதிர்ச்சியில் தல ரசிகர்கள்

அஜித்-சிவா கூட்டணியில் நான்காவதாக உருவாகவுள்ள திரைப்படம் விசுவாசம். இவர்கள் கூட்டணியில் கடைசியாக வெளியான விவேகம் திரைப்படம் மக்களிடம் வரவேற்ப்பை பெற வில்லை. ஆகவே இப்படத்தில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என இயக்குனர்  அவருக்கு எப்போதும் வரும் படு லோக்கலான கதையை எழுதியுள்ளார்.
இப்படத்தில் தன் எப்போதும் நடிக்கும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இல்லாமல் இளமை தோற்றத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக தயாரிப்பு தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகின. ரசிகர்கள் அவர்கள் மீண்டும் இணைந்தால் பாடல் ஹிட் என கொண்டாடினர். தற்போது வெளியான தகவலின் படி யுவன் சங்கர் ராஜா படத்திலிருந்து வெளியேறிவுள்ளதாக தெரிகிறது. இது ரசிகர்களிடம் வருத்தத்தை அளித்துள்ளது.
source : dinasuvadu.com

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment