அசரவைக்கும் ஹோண்டா ஆக்டிவாவின் விற்பனை! இத்தனை கோடி விற்பனையா?!!

ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனமானது இந்தியாவில் விற்பனையாகும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாகும். இது தற்போது விற்பனையில் ஓர் இமாலய சாதனையை செய்துள்ளது. இந்தியாவில் அதிகம் வாகனங்களை விற்று சாதனை படைத்துள்ளது.

இதுவரை ஹோண்டா மோட்டார் சைக்கிள் 25 மில்ல்லியன் (2.5 கோடி) ஸ்கூட்டர் வாகனங்களை விற்று பிரமாண்ட சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை இதுவரை எந்த ஸ்கூட்டர் வாகன நிறுவனமும் செய்யாத சாதனையாகும். இதற்க்கு முழு காரணம் ஹோண்டா ஆக்டிவா தான்.

விற்பனையான 2.5 கோடி ஸ்கூட்டர்களில் 2.2 கோடி வாகனம் ஹோண்டா ஆக்டிவா தான். இந்த சாதனையை செய்ய 17 ஆண்டுகள் ஆகியுள்ளன. அதிமுதல் 1 கோடி ஸ்கூட்டர்களை விற்க 13 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. அடுத்த 1 கோடி வாடிக்கையாளர்களை 3 ஆண்டுகளில் பெற்ற நிறுவனம் அடுத்த 50 லட்ச வாகனங்களை 1 வருடத்திலேயே விற்றுவிட்டது.

ஸ்கூட்டர் விற்பனை சந்தையில் 57% இடத்தை ஹோண்டா ஆக்டிவா தான் பிடித்துளள்து குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment