ஃபிலிப்கார்ட்டின் 60 சதவீத பங்குகளை வாங்க அமேஸானுக்கு ஆசை ..!

ஃபிலிப்கார்ட் நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை வாங்க அமேஸான் விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்திய நிறுவனமான ஃபிலிப்கார்ட்டின் 60 சதவீத பங்குகளை வாங்குவதற்கு அதே ஆன்லைன் சந்தைத்துறையில் முன்னணியின் உள்ள அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்காக விருப்பம் தெரிவித்து அமேசான் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக கோரிக்கை அனுப்பியுள்ளதாகவும், வால்மார்ட் நிறுவனமும் ஃபிலிப்கார்டின் பெரும்பாலான பங்குகளை பெற விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், ஃபிலிப்கார்ட், வால்மார்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் தரப்பில் இத்தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. Image result for amazon

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள் …

author avatar
Dinasuvadu desk

Leave a Comment