ஃபார்முலா ஒன் கார் பந்தயம் நடந்தது ..!

கனடாவில் நடைபெற்ற கிராண்ட் பிரி கார் போட்டியில் ஜெர்மனியைச் சேர்ந்த செபஸ்டியன் வேட்டல் (Sebastian Vettel ) வெற்றி பெற்றார். நடப்பு சீசனில் 7-ஆவது ஃபார்முலா ஒன் பந்தயம் கனடாவின் மான்ட்ரீல் நகரில் நேற்று நடைபெற்றது. போட்டியில் பங்கேற்ற முன்னணி வீரர்கள் ஒருவரை ஒருவர் முந்திச் சென்ற காட்சி பார்வையாளர்களை மயிர்க்கூச்செரியச் செய்தது.

பெராரி அணியின் வெட்டல் மின்னல்வேகத்தில் காரைச் செலுத்தி முதலிடத்தைப் பிடித்தார். 296 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை ஒரு மணி 10 நிமிடம் 7 விநாடிகளில் அவர் பந்தய தூரத்தைக் கடந்தார்.

மொனாக்கோவைச் சேர்ந்த வால்டேரி போட்டஸ் (Valtteri Bottas) 2ம் இடத்தையும், பெல்ஜிய வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (Max Verstappen) 3ம் இடத்தையும் பிடித்தனர்.
கார் எஞ்சின் கோளாறு காரணமாக, முந்தைய சாம்பியனான லீவிஸ் ஹாமில்டன் (Lewis Hamilton) ஐந்தாவது இடத்தில்தான் வர முடிந்தது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment