ஃபார்ச்சுனரின் சந்தையை அசைக்க காத்திருக்கும் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4! அதன் சிறப்பம்சங்கள்!!

ப்ரீமியம் கார் சந்தையில் அசைக்க முடியாத இடத்தில் உள்ளது டொயோட்டா ஃபார்ச்சுனர் ரக கார். மிரட்டும் தோற்றம். சாலை ஆளுமை. உழைப்பு, கம்பீரம் என வாடிக்கையாளர் மனதில் நீங்கா இடம் பிடித்த்துள்ளது டொயோட்டா ஃபார்ச்சுனர். இதன் மார்க்கெட்டை குறைக்க இதற்க்கு போட்டியாக மஹிந்திரா நிறுவனம் ராஜஸ்தானில் பிரமாண்டமாக அல்டுராஸ் ஜி4 எஸ்யுவி மாடலை களமிறங்கியுள்ளது.

இந்திய மதிப்பின் படி 26.95 லட்சம் மதிப்புள்ள இந்த வாகனம் ப்ரீமியம் ரக மாடலாக களமிறங்கியுள்ளது. இந்த ப்ரீமியம் எஸ்யுவி மாடலை வைத்திருப்பவர்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என அறிந்தே அதனை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் ராஜஸ்தான் மாநிலத்தில் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் சிலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்குள் போலோ விளையாட்டு நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டது.

இந்த மாடல் ஃபோர்டு எண்டெவர், இசுஸு எம்யூ-எக்ஸ், ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆகிய போட்டியாளர்களுக்கு கிட்டத்தட்ட இணையான விலையிலும், அதேநேரத்தில், டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி மாடல்களைவிட ஒன்று, இரண்டு லட்சங்கள் விலை குறைவாகவும் இருக்கிறது.

இந்த மாடல் தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் ரெக்ஸ்டன் நிறுவனத்தின் நான்காம் தலைமுறை ரெக்ஸ்டன் எஸ்யூவியின் ரீபேட்ஜ் தான் அல்டுராஸ் எஸ்யுவி ஜி4! ஆதலால் இதனை சாதாரண மஹிந்திரா கார் என நினைக்கவும் முடியாது.

இந்த ரக கார்களில் மஹிந்திரா அல்டுராஸ் எஸ்யுவி ஜி4 தான் நீள, அகலத்தில் பெரியது. அது உள்ளே இருக்கும் இடவசதியில் தெரிகிறது. மேலும் இந்த மாடலை டெஸ்ட் டிரைவ் செய்தால் வாடிக்கையாளர்களுக்கு பிடித்துவிடும் என நிறுவனம் நம்புகிறது. ஆதலால் தகுதிவாய்ந்த நபர்களுக்கு டெஸ்ட் டிரைவ் வாய்ப்பை வழங்குகிறது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment