இளைய தளபதி விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியாகி இருக்கும் படம் ‘சர்கார்’.இதை  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படம் தற்போது உள்ள அரசியல் சூழ்நிலை பற்றியும்,  கள்ள ஓட்டு பற்றியும் கூறி இயக்கி இருந்தார்.

 

Image result for அவதூறு வழக்கு

இந்த படம் குறித்து நிறைய விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் சர்கார் படத்திற்கு தற்போது அதிமுக போர்க்கொடி தூக்கியுள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் இப்படத்தை வெளியிடப்பட்டுள்ள திரையரங்குகள் முன்பு அதிமுகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Image result for கமல் images

போராட்டத்தின் போது கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் திரையரங்கு முன்பு வைக்கப்பட்டிருந்த விஜய் போஸ்டர்களை அதிமுகவினர் கிழித்தனர்.இந்நிலையில், கமல்ஹாசன் சர்கார் படத்திற்க்கு ஆதரவு அளித்துள்ளார்.

Image result for கமல்  விஜய்

இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டதாவது; முறையாகச் சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்திற்கு சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல என்று தெரிவித்துள்ளார்.

Image result for சர்கார் photos

மேலும் விமர்சனங்களை  ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும் என்றும் அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழிந்து நாடாளப் போகும் நல்லவர் கூட்டமே வெல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இது தமிழக மக்களிடமும்,விஜயின் ரசிகர்களிடமும் கமல் கூறிய கருத்து நல்ல வரவேற்பை  பெற்றுள்ளது.

DINASUVADU.