தமிழகத்தில் வட கிழக்கு பருவமழையானது நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகம், புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் என  சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஸ்டெல்லா கூறியதாவது,தற்போது   தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையையொட்டியுள்ள பகுதியில் காற்றழுத்த பகுதி நீடிக்கிறது. தென் தமிழகத்திலும் அதனை யொட்டியுள்ள பகுதியிலும் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

Image result for மழை

இது படிப்படியாக அதிகரித்து 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை கனமழையாக பெய்யத் தொடங்கும்.ஏற்கனவே தற்போதுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்று 6ம் தேதி புயலாக மாறி காற்றுடன் கூடிய மழையாக பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள கடலோர கர்நாடகாவில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

Image result for மழை

இதனால் வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு மற்றும் கேரளா, தெற்கு கர்நாடகா, ஆந்திராவின் ராயலசீமா பகுதிகளிலும் தற்போது தொடங்கி உள்ளதாக தெரிவித்தார். மேலும் சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,

Image result for மழை

மிதமான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றும்  அவர் தெரிவித்தார்.இதனால் விவசாயிகள் மகிழ்சியில் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

DINASUVADU.