வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நாளை சென்னை வர உள்ளார். தேசிய அரசியலில் பிரதமர்களை உருவாக்குவதில் திமுக தொடர்ந்து முக்கிய பங்கு வகித்து வருகிறது.

Image result for நாடாளுமன்றம்

திமுக தலைவராக கருணாநிதி இருந்த காலம் முதல் இந்த நிலை தொடர்ந்து வருகிறது. பிரதமராக வாஜ்பாய், வி.பி. சிங் போன்றவர்களை உருவாக்குவதில் கருணாநிதி முக்கிய பங்காற்றினார். அதே போல சோனியா காந்தியை பிரதமராக்க வேண்டும் என்று தேசிய தலைவர்களிடம் ஒருமித்த கருத்தை கருணாநிதி உருவாக்கியதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல் பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஆகியோர் பதவி ஏற்பதிலும் முக்கிய பங்காற்றினார்.

Related image

கருணாநிதியை தொடர்ந்து அவரது மகனும் தற்போதைய திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தேசிய அரசியலில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான அணியை உருவாக்க மு.க.ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார். மத்தியில் ஆளும் பா.ஜ.கவுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் மு.க.ஸ்டா லின் கடுமையான விமர்சனம் செய்து வருவது தேசிய தலைவர்களை கவர்ந்துள்ளது.காங்கிரஸ் மற்றும் மாநில, தேசிய கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான அணியை உருவாக்குவதில் ஸ்டாலின் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

Image result for நாடாளுமன்றம் தேர்தல்

இது குறித்து ஏற்கனவே மு.க.ஸ்டாலினை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். அதே போல மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களும் கருணாநிதி மறைவையடுத்து மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஏற்கனவே மு.க.ஸ்டாலினை சந்தித்தார். இந்த முயற்சியின் அடுத்த கட்டமாக மு.க.ஸ்டாலினுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்து இருந்தார். அதற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்தார்.

Image result for சந்திரபாபு நாயுடு

இதையடுத்து நாளை சந்திரபாபு நாயுடு சென்னை வந்து மு.க.ஸ்டாலினை சந்தித்து பாஜவுக்கு எதிராக வலுவான அணியை உருவாக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது.அவரைத் தொடர்ந்து மார்க்சிய கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி சென்னை வந்து மு.க.ஸ்டாலினை சந்திக்க இருக்கிறார்.

Image result for மோடி

இதற்கிடையே கர்நாடகத்தில் நடந்த இடைத் தேர்தல் முடிவுகளில் பாஜ தோல்வியும் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கட்சி கூட்டணியின் அமோக வெற்றியும் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக டெல்லியில் பாஜவுக்கு எதிராக அணி அமைப்பது குறித்து தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.

Image result for ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நாளை சென்னை வருகிறார். தேசிய அரசியலில் பிரதமர்களை உருவாக்குவதில் திமுக தொடர்ந்து முக்கிய பங்கு வகித்து வருகிறது. திமுக தலைவராக கருணாநிதி இருந்த காலம் முதல் இந்த நிலை தொடர்ந்து வருகிறது. பிரதமராக வாஜ்பாய், வி.பி. சிங் போன்றவர்களை உருவாக்குவதில் கருணாநிதி முக்கிய பங்காற்றினார். அதே போல சோனியா காந்தியை பிரதமராக்க வேண்டும் என்று தேசிய தலைவர்களிடம் ஒருமித்த கருத்தை கருணாநிதி உருவாக் கியதும் குறிப்பிடத்தக்கது.

Image result for ஸ்டாலின்

பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஆகியோர் பதவி ஏற்பதிலும் முக்கிய பங்காற்றினார். கருணாநிதியை தொடர்ந்து அவரது மகனும் தற்போதைய திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தேசிய அரசியலில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான அணியை உருவாக்க மு.க.ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார்.

Image result for ஸ்டாலின்

மத்தியில் ஆளும் பா.ஜ.கவுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் மு.க.ஸ்டா லின் கடுமையான விமர்சனம் செய்து வருவது தேசிய தலைவர்களை கவர்ந்துள்ளது.காங்கிரஸ் மற்றும் மாநில, தேசிய கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான அணியை உருவாக்குவதில் ஸ்டாலின் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இது குறித்து ஏற்கனவே மு.க.ஸ்டாலினை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். அதே போல மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களும் கருணாநிதி மறைவையடுத்து மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஏற்கனவே மு.க.ஸ்டாலினை சந்தித்தார். இந்த முயற்சியின் அடுத்த கட்டமாக மு.க.ஸ்டாலினுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்து இருந்தார். அதற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்தார். இதையடுத்து நாளை சந்திரபாபு நாயுடு சென்னை வந்து மு.க.ஸ்டாலினை சந்தித்து பாஜவுக்கு எதிராக வலுவான அணியை உருவாக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

Image result for ஸ்டாலின் சந்திரபாபு நாயுடுஅவரைத் தொடர்ந்து மார்க்சிய கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி சென்னை வந்து மு.க.ஸ்டாலினை சந்திக்க இருக்கிறார். இதற்கிடையே கர்நாடகத்தில் நடந்த இடைத் தேர்தல் முடிவுகளில் பாஜ தோல்வியும் காங்கிரஸ்,மதசார்பற்ற ஜனதா தள கட்சி கூட்டணியின் அமோக வெற்றியும் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக டெல்லியில் பாஜவுக்கு எதிராக அணி அமைப்பது குறித்து தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.

DINASUVADU.