தமிழகம் முழுவதும் தற்போது டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில், பன்றிக் காய்ச்சலால் மட்டும் இதுவரை 1,020 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், சிக்குன்குன்யா, எலிக்காய்ச்சல், மலேரியா உள்ளிட்ட பலவகையான காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றன.

Image result for பன்றி காய்ச்சல் பலி

காய்ச்சல் பாதிப்புகளைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தபோதும் ஒரு சில இடங்களில் உயிரிழப்புகளைத் தடுக்க முடியவில்லை என்றும், அதற்கு ‘காலம் தாழ்த்தி சிகிச்சைக்கு வருவதும், கண்ட கண்ட மாத்திரை, மருந்துகள் சாப்பிடுவதும்தான் காரணம்’ என்கிறார்கள் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள்.

Image result for பன்றி காய்ச்சல் பலி

இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 1,020 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 750 பேர் காய்ச்சல் குணமாகி இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டார்கள். துரதிஷ்டவசமாக 17 பேர் உயிரிழந்துவிட்டனர். மீதமுள்ளவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை எடுத்து வருகிறார்கள். சில போலி மருத்துவர்களிடம் சிகிச்சைக்குச் சென்று அவர்கள் கொடுக்கும் ஸ்டீராய்டு மாத்திரைகளைச் சாப்பிடுவதுதான் உயிரிழப்பு ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கிறது.

Related image

காய்ச்சல் விஷயத்தில் மக்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். காய்ச்சல் இருப்பது தெரிந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளில்தான் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல, டெங்கு, பன்றிக் காய்ச்சலுக்கு ஸ்டீராய்டு மருந்துகளைத் தரும் மருத்துவர்கள் மீது இந்திய மருத்துவ கவுன்சில் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.இந்த தகவலால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து காணப்படுகின்றனர்.இந்த காய்ச்சல்களை  பரவாமல் அரசு தடுக்க வேண்டும் என்று  மக்கள் கருதுகின்றனர்.

DINASUVADU.