உத்திரபிரதேச மாநிலம்,அயோத்தியில் 200 மீட்டர் உயரமுள்ள ராமர் சிலையை அமைக்க, உத்திரபிரதேச  அரசு தற்போது  முடிவு செய்துள்ளது.ஏற்கனவே  குஜராத்  மாநிலத்தில் நர்மதை ஆற்றங்கரையில் 183 மீட்டர் உயரமுள்ள 600 அடி சர்தார் வல்லபாய் படேல் சிலை, ரூ.3 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.

Image result for விவசாயி தற்கொலை

உலகிலேயே மிகவும் உயரமான இதை, சமீபத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிலையில், இதை விட பிரமாண்டமான சிலையை அயோத்தியில் அமைக்க உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான இடம் தற்போது  தேர்வு  செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை உபி முதல்வர் யோகி ஆதித்யாநாத் நேற்று பார்வையிட்டார்.இதை  தொடர்ந்து ராமஜென்ம பூமி, அனுமான் கோயில் ஆகியவற்றுக்கு சென்று வழிப்பட்டார்.

Image result for வறுமை images
பின்னர், யோகி அளித்த பேட்டியில், ‘‘அயோத்தியில் 200 மீட்டர் உயரமுள்ள ராமர் சிலை அமைக்கப்படும். சிலையின் உயரம் 150 மீட்டரும், அதன் பீடம் 50 மீட்டர் உயரமும் இருக்கும். இதன் மொத்த உயரம் 660 அடியாக இருக்கும். ராமரை தரிசிக்கவும், அவரை நினைவு கொள்ளவும் அயோத்திக்கு மக்கள் வருகின்றனர். அவர்களின் விருப்பத்தை இந்த சிலை பூர்த்தி செய்யும். அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும். அதற்கான வாய்ப்புகளை அரசு ஆராய்ந்து வருகிறது.

Image result for சர்தார் வல்லபாய் படேல் சிலை

அயோத்தி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அரசு மதிக்கிறது. நாட்டில் உள்ள அனைத்து ஞானிகளும் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். அயோத்தியை ராமரே அங்கீகரித்துள்ளார்’’ என்றார்.சர்தார் வல்லபாய் படேலின் சிலை உயரம் 157 மீட்டர். அதன் அடிபீடம் 25 மீட்டர் உயரம் கொண்டது. ஆனால், அயோத்தியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள ராமர் சிலை, இதை விட உயரமாக அமையும். இருப்பினும், இந்த சிலையின் உயரம் 150 மீட்டராகவும், அடிப்பீடம் 50 மீட்டராகவும் இருக்கும். பீடம் மட்டுமே உயரமாக அமையும். சிலையை பொருத்தவரையில், ராமர் சிலையை விட படேலின் சிலை 7 மீட்டர் உயரமாக இருக்கும்.

Related image

இதனால் தற்போதைய அரசுகள் சிலை வைப்பதில்  காட்டும் ஆர்வத்தை மக்கள் நலனில் காட்டினால் நன்றாகதான் இருக்கும் என்றும்,ஒவ்வொரு குடிமகனும் வியர்வை சிந்தி கட்டும் வரியை சிந்தித்து பயன்படுத்த வேண்டும்,என பொதுமக்கள் கருதுகின்றனர்.

DINASUVADU.