இலங்கை மன்னாரில் உள்ள புதைக்குழியில் இருந்து இதுவரை 256 மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இலங்கை, மன்னார் பகுதியில் உள்ள புதைக்குழியின் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இந்த அகழ்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதைக்குழியில் இருந்து இதுவரை 256 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாகவும், சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச வெளிநாடு சென்றிருந்த நிலையில், நிறுத்தப்பட்டிருந்த அகழ்வு பணிகள் தற்போது மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

DINASUVADU.COM