இமாச்சல பிரதேசத்தில் செப்டம்பர் 21 முதல் பள்ளிகள் திறப்பு.!

இமாச்சல பிரதேசத்தில் உள்ள பள்ளிகள் செப்டம்பர் 21  திங்கள் முதல்  திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் செப்டம்பர் 21 முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மீண்டும் திறக்க இமாச்சலப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான முடிவு நேற்று மாலை முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,மத்திய அமைச்சகத்தின் நிலையான நேர்முறைகளின் படி, செப்டம்பர் 21 முதல் மாநிலத்தில் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே கல்வி நிறுவனங்களைத் திறக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அந்த வகையில், 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகை தரும் வகையில் 50 சதவீதம்  மாணவர்கள் மற்றும் ஊழியர்களுடன் இந்த பள்ளிகள் திறக்கப்படும். இதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.