அணை மேம்பாட்டு மற்றும் புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 736 அணைகளில், ரூ. 10,211 கோடி மதிப்பீட்டில் அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் நகரங்களை விட கிராமப்புறங்களே அதிகளவில் உள்ளது. அதில் பெரும்பாலானோர், விவசாயத்தை நம்பி வருகின்றனர். அவர்களுக்கு நீர் ஆதாரங்களாக அங்குள்ள அணைகளை நம்பி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்ட மத்திய அரசு, நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 736 அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது.

தற்பொழுது இந்த அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி மத்திய அரசு, ரூ.10,211 கோடி செலவில் அணைகளை புனரமைப்பு மற்றும் மேம்படுத்தவுள்ளது. இந்த திட்டம், அடுத்தாண்டு ஏப்ரலில் தொடங்கி, மார்ச் 2031-குள் நிரந்தவடைய திட்டமிடப்பட்டுள்ளது.