இன்று முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆயிரம் பக்தர்கள் அனுமதி!

இன்று முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆயிரம் பக்தர்கள் அனுமதி!

இன்று முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆயிரம் பக்தர்களுக்கு இலவசமாக டோக்கன் வழங்கி அனுமதியளிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதலே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையில் உள்ளது. தற்போதும் நடைமுறையில் இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் கருதி சில தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதே கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்துமே மூடப்பட்டது. அதில் ஒன்றாக பிரபலமான திருமலையில் உள்ள திருப்பதி கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. பூஜைகள் வழக்கம் போல நடந்து வந்தாலும், பிரம்மோற்சவ விழாக்கள் கூட பக்தர்கள் இன்றி தான் நடந்தது.

இந்நிலையில் ஜூன் 11 ஆம் தேதி கட்டுப்பாடுகளை அரசும் தளர்த்தியதையடுத்து பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பின் கொரோனா தாக்கம் அதிகரித்தால் மீண்டும் பக்தர்களின் தரிசனத்திற்கு அங்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்று நாள்தோறும் 3,000 பேருக்கு இலவசமாக டோக்கன் வழங்கி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று முதல் மீண்டும் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு இலவசமாக தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal
Join our channel google news Youtube