#BREAKING: மசோதா மீது முடிவெடுக்க அவகாசம் தேவை..தமிழக ஆளுநர்.!

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விளக்கம் அளித்த்துள்ளார்.

அதில், 7.5 % உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவெடுக்க 3 முதல் 4 வாரங்கள் தேவை. நீட் முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு மசோதா பற்றி அனைத்து கோணங்களிலும் ஆலோசிக்க வேண்டியுள்ளது.

அமைச்சர்களிடமும் மூன்று அல்லது நான்கு வாரங்கள் அவகாசம் தேவை என்பதை தெரிவித்திருக்கிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

author avatar
murugan