இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

இந்திய மற்றும் அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையே மூன்றாவது 2+2 பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெற்றது .இந்தியா சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றனர்.அமெரிக்கா சார்பில், வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, செயலாளர் மார்க் டி எஸ்பர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் இன்று  டெல்லியில் கையெழுத்தாகியது. அதாவது ,அடிப்படை பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (Basic Exchange and Cooperation Agreement – BECA)  இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத்திட்டது. மேலும் ஆயுர்வேதம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சி துறையில் ஒத்துழைப்பு தொடர்பாகவும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

Join our channel google news Youtube