வறுமைக்கு விடை கொடுக்க வழி தெரியாமல், மகளுக்கு முடிவுரை எழுதிய தாய்!

வறுமைக்கு விடை கொடுக்க வழி தெரியாமல், மகளுக்கு முடிவுரை எழுதிய தாய்!

வறுமையை போக்க வழியின்றி 6 வயது குழந்தையை கொன்ற தாய்.

உலகம் முழுவதிலும் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் பலர் வேலைக்கு செல்ல முடியாத காரணத்தினால் வறுமையில் சிக்கி தவித்து வருகின்றனர். உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் உஷாதேவி எனும் பெண் கொரோனா காலகட்டத்தில் மிகக் கொடுமையான வறுமையில் சிக்கியுள்ளார். தனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாததால் உஷா தேவி வருமானத்தில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் என ஐந்து பேருக்கு உழைத்து சாப்பாடு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தும் வருமானம் போதாததால் பல நாட்கள் பட்டினி கிடந்துள்ளார்.
இந்நிலையில் ஆண் குழந்தைகள் இருந்தாலும் பரவாயில்லை ஆனால் பெண் குழந்தை இருந்தால் எதிர்காலத்தில் எவ்வாறு திருமணம் செய்து வைப்பது என நினைத்து கலங்கிய உஷாதேவி தனது மனதை கல்லாக்கிக் கொண்டு அவரது மகளை கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரித்த காவல்துறையினர் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். இதுகுறித்து கூறிய அந்த பெண் வறுமையால் மனம் குழப்பத்தில் ஆழ்ந்து இருந்ததாகவும் என்ன செய்வதென்று தெரியாமல் தான் தன் மகளை கொலை செய்ததாகவும் கூறியுள்ளார்.
author avatar
Rebekal
Join our channel google news Youtube