பள்ளிகள் திறப்பு : முதல்வர் அறிவிப்பார் ஆனால், சாத்தியக்கூறு இப்பொழுது இல்லை!

பள்ளிகள் திறப்பு : முதல்வர் அறிவிப்பார் ஆனால், சாத்தியக்கூறு இப்பொழுது இல்லை!

பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் அறிவிப்பார் ஆனால், அதற்கான சாத்தியக்கூறு இப்பொழுது இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் தீவிரமடைந்து கொண்டே செல்வதால் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கு தற்பொழுது வரை அமல்படுத்தப்பட்ட நிலையில் தான் உள்ளது. தளர்வுகளை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தான் அரசு அறிவித்து இருக்கிறது. இருப்பினும், பள்ளிகள் திறப்பது குறித்து தற்போது வரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் தனியார் பள்ளிகள் சில உயர் நீதிமன்றத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அது குறித்த தகவலையும் வருகிற நவம்பர் மாதம் 11-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தலைமை செயலகத்தில் உள்ள உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் அறிவிப்பார் எனவும் தற்போது அதற்கான சாத்தியக்கூறுகள் எதுவுமில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு டிசம்பர் மாதம் முதல் துவங்கும் எனவும், பாடத்திட்டங்கள் குறைப்பு தொடர்பாக 10 நாளில் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube