கோவா ரேஷன் கடையில் ரூ.32-க்கு விற்கப்படும் வெங்காயம்.!

கோவாவில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.32-க்கு விற்கப்படும் கோவா அரசு அறிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் வெங்காயம் சாகுபடி பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைந்துள்ளது . எனவே வெங்காய வரத்து குறைந்ததை அடுத்து நாளுக்கு நாள் வெங்காய விலை அதிகரித்து கொண்டே செல்கிறது.இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வெங்காய பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் பல இடங்களில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், 1045 மெட்ரிக் டன் வெங்காயத்தை மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு அதனை 3 கிலோ வெங்காயம் வரை ரூ.32 என்ற விலையில் கோவாவில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என்று கோவா அரசு அறிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.