50% இடஒதுக்கீடு…. இன்று தீர்ப்பு!

50% இடஒதுக்கீடு…. இன்று தீர்ப்பு!

OBC மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு அளிக்கிறது.

தமிழகத்திலிருந்து ஒதுக்கீட்டில்  மருத்துவ இடங்களில் 50 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசின் தொகுப்பில் இருந்து வழங்கப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் அவ்வுத்தரவில் ஒரு குழுவை அமைக்கவும், அக்குழு கொடுக்கும் பரிந்துரைகளின் படி இட ஒதுக்கீட்டை  அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த கடந்த ஜூலை 27ந்தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதில் இழுபறி ஏற்படவே தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் சார்பாக இந்த ஆண்டே இட ஒதுக்கீட்டை  மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனு மீதான விசாரணை கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 50 % இடஒதுக்கீடு வழங்க முடியாது எண்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.

மேலும் நீட் தேர்வுகள் நடைபெற்று தேர்வு முடிவுகள் தற்போது வெளியாக உள்ள நிலையில் உடனடியாக இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை எடுக்க முடியாது.

அவ்வாறு இட ஒதுக்கீடு வழங்கினால்  குழப்பத்தை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு தரப்பில் முன் வைக்கப்பட்டது.


author avatar
kavitha
Join our channel google news Youtube