உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது – வைகோ

உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது – வைகோ

உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது. இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது.

இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சரியான முறையை பின்பற்றவில்லை என கூறி தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 % இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி திமுக, அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, காங்கிரஸ், விசிக மற்றும் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பின்படி, மருத்துவப் படிப்பில் ஒ.பி.சி மாணவர்களுக்கு, நடப்பாண்டில் 50% இட ஒதுக்கீடு வழங்க முடியாது என தெரிவித்துள்ளது.

இது குறித்து வைகோ அவர்கள் கூறுகையில், ஓபிசிக்கு நடப்பாண்டில் 50% இடஒதுக்கீடு கிடையாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது. இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube