வியக்க வைக்கும் வேர்க்கடலையின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணம் அறியலாம்!

வியக்க வைக்கும் வேர்க்கடலையின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணம் அறியலாம்!

நிலத்தின் அடி வேரில் முளைக்கக் கூடிய வேர்க்கடலையில் நமக்கே தெரியாத ஏகப்பட்ட ஆரோக்கியமான நன்மைகளும் மருத்துவ குணங்களும் உள்ளது. புரோட்டீன், கால்சியம், நார்ச்சத்து, பொட்டாசியம் இரும்பு ஆகிய பல குணங்கள் நிறைந்த இந்த வேர்க்கடலையில் எவ்வளவு மருத்துவ நன்மைகள் உள்ளது என்பது குறித்து அறியலாம் வாருங்கள்.

வேர்க்கடலையின் நன்மைகள்

100 கிராம் வேர்க்கடலையில் 30 கிராம் அளவுக்கு புரதச்சத்துக்கள் இருப்பதால் இது உடல் தசை மற்றும் முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு உடலுக்கு தேவையான சத்துக்களை அள்ளித் தருகிறது. இதில் வைட்டமின் மற்றும் மினரல் அதிகம் இருப்பதால் உடல் சோர்வு நீக்கி, புத்துணர்ச்சி அளிக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரையக்கூடிய தன்மை வேர்கடலையில் உள்ளது. புரதச் சத்து இதில் அதிகம் இருப்பதால் வளரக்கூடிய குழந்தைகளுக்கு இது மிகவும் நல்லது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் காணப்படுவதால், உடலில் ஏற்படக்கூடிய செல் அழிவினை தடுப்பதுடன் செல்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
வைட்டமின் இ மற்றும் புரதம் நிறைந்து காணப்பட கூடிய இந்த வேர்க்கடலை சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கிறது. இதய ஆரோக்கியத்தில் இது முக்கிய பங்கு வகிப்பதுடன் புற்றுநோய் வராமல் தடுப்பதிலும் வேர்க்கடலை மிகச்சிறந்தது. கால்சியம், மக்னீசியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வலிமையை அதிகரிப்பதோடு, முடி கொட்டுதல் பிரச்சினையை நீக்கி ஆரோக்கியமான முடி வளரவும் உதவி செய்கிறது.
author avatar
Rebekal
Join our channel google news Youtube