இவ்வளவு நாள் வாட்ஸ்அப் உபயோகிக்கிறீர்களே.. இத கவனிச்சீங்களா?

அண்மையில் வாட்ஸ்அப் நிறுவனம், வாட்ஸ்அப் செயலிக்கு சில புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியது. அதன்மூலம் நமது வேலைகளை எளிதாக்குகிறது.

தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் இல்லையென்றால் எதுவுமே இல்லை. அரட்டை. செய்திகள் முதல் ஆன்லைன் கிளாஸ் வரை உள்ளிட்ட நமது அனைத்து பயன்பாட்டிற்கும் உதவுகிறது. வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் விடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் இலவசமாக பேசி மகிழலாம்.

மேலும், வாட்ஸ்அப்-ல் நீங்கள் அடிக்கடி புகைப்படங்கள், விடியோக்கள், லிங்க், டாகுமெண்ட் உள்ளிட்டவற்றை அடிக்கடி அனுப்புவீர்கள். அப்படி அனுப்பப்பட்ட புகைப்படங்கள் உள்ளிட்டவையை யாருக்கு அனுப்புனீர்கள் என மறந்துவிடுவது வழக்கம். அதனை தற்பொழுது எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

அதன்படி, நீங்கள் தேடும் புகைப்படங்கள், விடியோக்கள் போன்றவற்றை கண்டறிய முதலில் யூக்லின் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்யுங்கள். அதன்பின் உங்களின் மொபைலில் உள்ள வாட்ஸ்அப் செயலிக்குள் நுழைந்து, “சர்ச்” ஐகானை தொடுங்கள் அதன்பின போட்டோஸ், வீடியோஸ், லிங்க்ஸ், ஜிப், ஆடியோ, டாக்குமெண்ட்ஸ் போன்றவைகள் இருக்கும்.

அதில் புகைப்படம் என்றால் புகைப்படத்தை தேர்வு செய்யவும். அதில் நீங்கள் இதுவரை அனுப்பிய, பிறர் உங்களுக்கு அனுப்பிய புகைப்படங்கள் வரும். அதன்மூலம் நீங்கள் தேடும் புகைப்படங்களை கண்டுபிடித்து எடுத்துகொள்ளக்காம். மேலும் வாட்ஸ்அப், தனது வெப் பயனர்களுக்கு வீடியோ கால், வாய்ஸ் கால் உள்ளிட்ட வசதிகளை அறிமுகப்படுத்தியவுள்ளது, குறிப்பிடத்தக்கது.