பொருளாதார நிலைமையை சீரமைக்க ரங்கராஜன் குழு அறிக்கை தாக்கல்.!

பொருளாதார நிலைமையை சீரமைக்க ரங்கராஜன் குழு அறிக்கை தாக்கல்.!

பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட ரங்கராஜன் குழு முதலமைச்சரிடம் பரிந்துரைகளை வழங்கியது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமையை சீரமைக்க ரங்கராஜன் குழு முதல்வர் பழனிசாமியிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரங்கராஜன், பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பாக பரிந்துரைகளை முதல்வரிடம் வழங்கியுள்ளோம். மேலும், வேறொரு கணக்கீட்டின்படி தமிழக பொருளாதார வளர்ச்சி குறையக்கூடும் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் 2 மாதங்களில் பொருளாதார நிலை மாறும் என்றும் சிறு தொழில்களுக்கு கடன் உத்தரவாத திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும் ரங்கராஜன் தெரிவித்துள்ளார். இதனிடையே, கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு காரணத்தால் அனைத்து துறையும் முடங்கியதால், பொருளாதாரம் பாதிப்படைந்தன. இதை மேம்படுத்தவும், பொருளாதாரம் குறித்து ஆய்வு செய்யவும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட குழுவை அமைத்திருந்த‌து குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube